2023 டிசம்பருக்குள் "வந்தே மெட்ரோ" ரயில்!

வந்தே மெட்ரோ
வந்தே மெட்ரோ
Published on

"வந்தே பாரத்" ரயில்களை அடுத்து "வந்தே மெட்ரா" ரயில்களை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த ரயில்கள் 2023 ஆம் ஆண்டு டிம்பர் மாதம் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

"வந்தே மெட்ரோ" ரயிலுக்கான வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு பொறியாளர்களே இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்  வருகின்ற மே அல்லது ஜூன் மாதம் இந்த வடிவமைப்பும் பணி முடியும். இவை உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

நாடு முழுவதும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்கள் 1950 மற்றும் 1960-களில் தயாரிக்கப்பட்டவை. அவற்றுக்கு பதிலாக இந்த "வந்தே மெட்ரோ" ரயில்கள் புதிய வடிவில் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்.

"வந்தே மெட்ரோ" ரயில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வகையில் பயனுள்ளதாக இருக்கும்.

பணக்காரர்கள் தங்களுக்கு செளகரியமானதை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், எழை மற்றும் நடுத்தர வர்த்தகத்தினரால் அதிகம் செலவழிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு "வந்தே மெட்ரோ" ரயிலை தயாரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்.

ரயிலை வடிவமைக்கும் பணி முடிந்ததும் விரைவில் ரயில்கள் தயாரிக்கப்பட்டு முதல் ஹைடிரஜன் ரயில் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் இயக்கப்படும். 

ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. "வந்தே பாரத்-3" ரயிலை வடிவமைக்கும் பணியிலும் ரயில்வே ஈடுபட்டுள்ளது. இதில் படுக்கை வசதி இருக்கும். நீண்டதூர பயணங்களுக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படும்.

தற்போது ரயில்வே, தினமும் 12 கி.மீ. தொலைவுக்கு இருப்புப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இது வெறும் 4 கி.மீ. ஆக இருந்தது. வரும் ஆண்டுகளில் இது 16 கி.மீ. ஆக அதிகரிக்கப்படும்.

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவதற்கு முழுவீச்சில் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது வெற்றிகரமாக அமைந்தால் நாட்டின் இதர பகுதிகளிலும் புல்லட் ரயில் விடுவது பற்றி பரிசசீலித்து முடிவு எடுக்கப்படும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com