வாங்கிய கடனை பெற்றுத் தரும்படி அமைச்சரை நோகடித்த இளைஞர்கள்!

வாங்கிய கடனை பெற்றுத் தரும்படி அமைச்சரை நோகடித்த இளைஞர்கள்!

ராணிப்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆர்.காந்தி. இவர் தமிழக அரசில் கைத்தறித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் கடந்த 21ம் தேதி ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சில பணிகளை முடித்துவிட்டு மீண்டும் காரில் ராணிப்பேட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது கார் காவேரிப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய இரு நபர்கள் அமைச்சர் காந்தியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசி உள்ளனர்.

இது தொடர்பாக, அமைச்சர் காந்தியின் உதவியாளர் காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் செல்போன் தொடர்பு எண்ணை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையில் செல்போனில் பேசிய அந்த இருவரும் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்களைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீசார் அந்த இரு இளைஞர்களைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த இரு இளைஞர்களும் அமைச்சரை ஏன் ஒருமையில் தரக்குறைவாகப் பேசினார்கள் என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த சாமுவேல் என்பவர் அந்த இரு இளைஞர்களும் வேலை பார்க்கும் வங்கியில் இருந்து கடன் பெற்று உள்ளார். சாமுவேல் வாங்கிய கடனை முறையாகச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. ராணிப்பேட்டைச் சேர்ந்த சாமுவேல் பெற்ற கடனை திரும்பப் பெற்றுத் தரும்படிதான் அவர்கள் அமைச்சர் காந்தியை மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் முக்கியமான அமைச்சர் பொறுப்பில் இருப்பவரை ஒருமையில் பேசி அவமதித்த அந்த இருவர் சென்னையை சேர்ந்த கோகுல் மற்றும் பாலாஜி என்பது போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த இரு இளைஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com