ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு ஆஸ்கர் விருது வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றும் கோன்சால்வ்ஸ்க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதை வென்ற பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று காலை நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , அமுமுக தலைவர் தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்