#BREAKING : சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை கைவிடுக்கிறாரா திருமாவளவன்?

திருமாவளவன்
திருமாவளவன்
Updated on

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி , நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 8 தொகுதிகளை கூட்டணியில் பெற்றுள்ளது. இந்த 8 தொகுதிகளில் ஒன்றான காட்டுமன்னார்கோவில்(தனி)  தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக  பதவி வகிக்கிறார். 

 நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்த முறை ஆளூர் ஷாநவாஸ்சிற்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படாததால் கட்சிக்குள் சிறிய அளவில் சலசலப்பும் ஏற்பட்டது. கூட்டணி கட்சிகள் திருமாவளவன் தமிழக முழுக்க சென்று பரப்புரையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக,  செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆயினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை..

இதையும் படியுங்கள்:
சிலிண்டர் தட்டுப்பாடுக்கு வந்தாச்சு ஓர் தீர்வு..! 46,650 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்த இந்திய கப்பல்..!
திருமாவளவன்
logo
Kalki Online
kalkionline.com