

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இந்தியா கூட்டணியை சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
விஜய் திமுகவை கடுமையாக எதிர்ப்பதாக தன்னை காட்டிக் கொள்கிறார். ஆனால் ,உண்மையில் பாஜகவிற்கு ஆதரவாக வலு சேர்க்கும் வகையிலே அவர்கள் செயல்பாடுகள் உள்ளது, என்று திருமாவளவன் விமர்சித்தார். தன்னால் இந்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட விஜய் , திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதையே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்.
விஜயினுடைய அரசியல் நகர்வுகள் , மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவை மறைமுகமாக பாஜக மற்றும் அதிமுகவிற்கு சாதகமாக மாறக்கூடும்.
திமுகவை அதிகாரத்திலிருந்து விரட்டிவிட்டு அந்த இடத்தில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளை அமர வைக்க விஜய் முயற்சி செய்கிறார், என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.