

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சி ஜோசப் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்று பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில் வேறு வழியின்றி திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது .
தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு காவல்துறையினர் அணி வகுப்பு மரியாதை உடன் வரவேற்றனர்.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் ஆகியோரும் முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். மேலும் மதிமுக எம்பியான துரை வைகோ விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக முதலமைச்சரான பின் விஜய் முதன் முறையாக தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார் விஜய்.
பொதுக்கூட்ட அரங்கில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது முதலமைச்சரான பின் விஜய் பேசிய முதல் உரையிலிருந்து...
முதலமைச்சர் வருகையின் பொழுது மனு அளிக்க காத்திருந்த நபரை கவனித்து, பாதுகாவலர் வாயிலாக வாங்கிய முதலமைச்சர் விஜய்.
திருச்சியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
கரை புரளும் காவிரி போல கூடியிருக்கும் திருச்சி மக்களுக்கு வணக்கம்.." என தவெகவின் முன்னாள் தொகுப்பாளரும் என்னால் கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகன் முதலமைச்சர் விஜயை வரவேற்றது குறிப்பிடத்தக்கது..
தவெகவின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ,,கு. ப கிருஷ்ணன், திருச்சியை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரைத் தொடர்ந்து விஜய் பேசினார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வணக்கமும் நன்றியும் குறிப்பாக திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஸ்பெஷல் வணக்கம் ஸ்பெஷல் நன்றியும் .
என்னை பெரம்பூர் தொகுதியின் எம்எல்ஏ என சொல்வது தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு . ஆனால் தமிழ்நாட்டின் இதயமாக திருச்சி இருப்பது போல் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது இந்த திருச்சி கிழக்கு தொகுதி.
ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னார்கள் ஆனால் ஆறு ஆறு நாட்கள் கூட இருக்கவில்லை கல்யாண வீட்டில் எல்லாம் சென்று புலம்பி கொண்டிருக்கிறார்கள் தவெக ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் எல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டனர். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என எங்களை கொண்டு வந்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எனது நன்றிகள்..
எதிர்கால தேர்தல்களில் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்த தலைவர்கள் இயக்கங்களுக்கு நன்றி எம்ஜிஆர் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தவெக அதிக வாக்குகளை பெற்றுள்ளது எம்ஜிஆர் ரோடு என்னை ஒப்பிட வேண்டாம் எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம் தவக்காவை பற்றி என்னைப் பற்றி தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டே இருங்கள் என்னை கிண்டல் செய்து செய்பவர்கள் தான் எனது எனர்ஜி.
எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி இடையில் யாருமில்லை எப்பவும் தவெக- திமுக இடையே தான் போட்டி.
தொண்டர்கள் உழைக்கின்றனர் திமுக தலைவர்கள் சொகுசாக வாழ்கின்றனர்.
ரீல்ஸ் போட்டவர்கள் எல்லாம் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நியூஸ் பார்க்கிறார்கள் என்னையும் மக்களையும் பிரிக்க முடியாது என்னை பற்றி தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டே இருங்கள் என்னை கிண்டல் செய்தாலும் மக்களுக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன்.
ஆக்கபூர்வ விமர்சனங்களை செய்து மக்கள் மனசை வெல்ல எதிர்க்கட்சிகள் முயல வேண்டும் .டெக்னிக்கைகளை பயன்படுத்தி என்னையும் மக்களையும் பிரிக்க முடியாது. 100 யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது அல்ல ஜெயலலிதா மேடம் தந்தது.
Gen Z இளைஞர்களை கவர்வதாக கூத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பரவி கிடக்கிறது போதை கலாச்சாரத்தை துவக்கத்திலேயே திமுக அரசு கிள்ளி எறிந்து இருக்கலாம்.
அடுத்த வாரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவங்க உள்ளது .சிறப்பான காவல் அதிகாரிகளை நியமித்துள்ளோம்.
பொய் சொல்லி ஏமாற்ற விஜய் அரசியலுக்கு வரவில்லை விவசாய பெருமக்களே என்னை நம்பலாம் கவலைப்படாதீர்கள்.
தமிழ்நாட்டில் மத அரசியலை தவெக உடைத்து விட்டது திமுக தீய சக்தி மட்டுமல்ல மக்களை விட்டு தூரச்சென்ற சக்தி தீர்ந்த போன சக்தியோடு இணைந்து ஆட்சி அமைக்க மனம் என்ற திமுக மக்கள் நம்முடன் உள்ள போது தேவைக்காக எதற்கு குதிரை பேர அரசியல்
தமிழ்நாட்டில் வாக்கிற்கு பணம் என்ற என்ற கலாச்சாரத்தில் தவெக உடைத்துள்ளது. சமூக நீதி சமத்துவத்தை ஒருபோதும் தவெக விட்டுக் கொடுக்காது
ஒரு மாதத்தில் அதிகபட்சம் என்ன முடியுமோ அந்த அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஊழல் இல்லாத லஞ்சம் இல்லாத ஆட்சியை தவெக கொடுக்கும்
த.வெ.க ஆட்சிக்கு வர கூடாது என்று தி.மு.க.வும் மற்றும் பலரும் கடைசி 5 நாட்கள் செய்த ஆட்டம் இருக்கே... பிற்காலத்தில் மக்களுக்காக உழைக்க வந்த இந்த விஜய்யா அல்லது விஜய் முதல்வர் ஆக கூடாது என்று வேலை செய்த ஸ்டாலின் சாரா என்று தான் இருக்கும்.
அண்ணா தொடங்கிய கட்சியை அடிமை கூடாரமாக மாற்றிவிட்டு, உண்மையை சொல் உடன் பிறப்பே என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுபோட்டால் மக்கள் நல்லவர்கள், நமக்கு ஓட்டு போட்டா மக்கள் கெட்டவர்களா? எனக்கு நல்ல வாயில வருது வேண்டாம். எங்க அண்ணன் விஜயகாந்த் சொல்கிற மாதிரி என்று விஜய் பேசியுள்ளார்.
தி.மு.க இப்போது தீய சக்தி இல்லை, தீர்ந்துபோன சக்தி, மக்களை விட்டு தூரமாக சென்ற தூர சக்தியாக மாறிவிட்டது என்று விஜய் பேசியுள்ளார்.
மீண்டும் தன்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி சொல்லி வெள்ளி செங்கோல் பரிசுகளை பெற்று விடைபெற்றார் விஜய்.