ஆறு வருடங்களாக பழங்கள் மட்டுமே உணவு: திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்!

ஆறு வருடங்களாக பழங்கள் மட்டுமே உணவு: திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்!
Published on

றைச்சி, தண்ணீர், சோறு, பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளுக்கு பதிலாக வெறும் பழங்கள், பழச்சாறுகளை மட்டுமே உண்டு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தனது 39 வயதிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

மனிதர்களைப் பொறுத்தவரை இந்த சைவ, அசைவப் பிரச்சனை பலகாலமாக இருந்து வருகிறது. ஒரு சாரார் மனிதர்கள் மாமிச உண்ணி கிடையாது சைவம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்கின்றனர். மற்றொரு சாரார், இயற்கையிலேயே பல மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து தான் பொருட்கள் உருவாகிறது. இப்படி இருக்கையில் நாம் உயிர் வாழ சைவ உணவு மட்டுமே சாப்பிடுவது சரியாக இருக்காது என மாமிசம் சாப்பிடுவதை ஆதரித்து வருகின்றனர். இதில் சிலர் அனைத்தையுமே கலந்து சாப்பிடும் நபர்களாக இருக்கின்றனர். 

இப்படிதான், தன்னை பழங்கள் காய்கறிகளை மட்டுமே சாப்பிடும் 'வீகன்' என அடையாளப்படுத்தி, சமைக்காத வெறும் சைவ உணவை மட்டுமே 6 வருடங்களாக சாப்பிட்டுவந்த இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த 'ஜன்னா சாம்சனோவா' என்ற பெண் 'ஜன்னா டி'ஆர்ட்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இவர் ஒரு துளி தண்ணீர் கூட குடித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. உடலின் நீர் தேவைப் பூர்த்திசெய்ய பழச்சாறுகளை மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அதேபோல சமைக்காத பச்சைக் காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவால் இவர் உயிர் இழந்துள்ளார். 

இதுகுறித்து அவரது நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், "அவளுடைய கண்கள் எப்போதும் பிரகாசமாக இருக்கும். முடியும் நீளமாக இருக்கும். தன்னுடைய கண்களும், முடியும் மட்டுமே அழகு என்று அவர் நம்பிக்கொண்டிருந்ததால், தனது உடல், எலும்பு தோலுமாய் இருந்தாலும் அதை சரிவர பராமரிக்கவில்லை. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது மருத்துவர்களை அணுகச் சொல்வோம். ஆனால் எங்களுடைய பேச்சை அவள் கேட்கமாட்டாள். மருத்துவர்களிடம் சென்றால் பழங்களைத் தான் சாப்பிட சொல்வார்கள், எனவே நான் பழங்களையே சாப்பிட்டுக் கொள்கிறேன் என அதிபயங்கர டயட் மெயின்டைன் செய்து வந்தாள். அரிசி, கீரை, தானியங்கள் உள்ளிட்ட எந்த பொருளையும் அவள் இதுவரை சாப்பிட்டு நாங்கள் பார்த்ததில்லை. இறுதியில் அவள் தற்போது இறந்துவிட்டால்" எனக் கூறினர். 

நாம் சைவம் சாப்பிடுகிறோமா அல்லது அசைவம் சாப்பிடுகிறோமா என்பதைத் தாண்டி, எது சாப்பிட்டாலும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும் படி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவரது இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தப் பெண்ணின் மரணம் தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com