வெற்றி மலை முருகன் கோவில்!

வெற்றி மலை முருகன் கோவில்!

க்கோவில் அந்தமான் போர்ட் ப்ளேரில் உள்ளது. இங்கு கணபதி, முருகன், சிவன், அம்பாள் என எல்லா சந்நிதிகளும் உள்ளன. இந்த கோவில் சுதந்திரத்திற்கு முன் 1926 ல் Ross Island தீவில் அமைந்திருந்தது. மக்கள் படகு மூலம் அங்கு பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற விழாக்களின் போது சென்று வந்திருந்தனர். ஒரு முறை படகு கவிழ்ந்து நிறைய உயிர் சேதம் ஏற்பட்டவுடன் இந்த கோவில் அந்தமான் தலைநகரமான போர்ட் ப்ளேருக்கு இடம் பெயர்ந்தது.

        ஆரம்பத்தில் இந்த கோவிலை பொன்னுரங்க முதலியார் என்பவர் தான் பார்த்துக் கொண்டிருந்தார். இக்கோவிலின் நேரம் காலை 5 மணி முதல் 12 மணி வரை . மாலை 4 மணி முதல் 9 மணி வரை. சென்னையில் இருக்கும் கந்தகோட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த வெற்றி மலை முருகன் கோவில் கட்டப்பட்டது .இந்த கோவிலில் பங்குனி உத்திரம் ,கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. விழா காலங்களில் கிட்டத்தட்ட 40,000 பேருக்கு உணவு அளிக்கப்படுவது சிறந்த தொண்டாக பார்க்கப்படுகிறது. இந்த கோவில் நன்கு பராமரிக்கப்படுவதுடன் விழா காலங்களில் எவ்வளவு கூட்டம் வந்தாலும் சமாளித்து விடுவது தான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அலகு குத்துதல், தீமிதி விழா, காவடி, பால்குடம் எடுத்தல் போன்றவை இக்கோவிலின் சிறப்புகள். விழாக் காலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. தைப்பூசத்தன்று பால்குடம் எடுப்பது, அன்னதானம் வழங்குவது என வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாங்கள் தைப்பூசத்தன்று இந்த சக்தி வாய்ந்த முருகப்பெருமானே தரிசிக்கும் பேறு பெற்றோம்.

      அழகென்ற சொல்லுக்கு முருகா என்பதற்கு ஏற்ப மிக அழகான சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com