விடியல் 3.0 - அமைச்சரவை மாற்றத்துடன் தி.மு.க ஆட்சி, மூன்றாவது ஆண்டை தொடங்குகிறதா?

விடியல் 3.0 - அமைச்சரவை மாற்றத்துடன் தி.மு.க ஆட்சி, மூன்றாவது ஆண்டை தொடங்குகிறதா?

வெற்றிகரமாக 2வது ஆண்டை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தடாலடி மாற்றங்கள் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பை அமைச்சரவைக்கூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வரும் 7ந் தேதி இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை தொடங்குகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றங்கள், அதிகாரிகள் மாற்றம், புதிய தடாலடி அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வரவிருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனைக்குப் பின்னர் பல விஷயங்கள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

முதலில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் எத்தனை செய்து முடிக்கப்பட்டுள்ளன, எத்தனை தற்போது நிலுவையில் இருக்கிறது என்பது குறித்த விவாதம் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவட்டம் தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வகுக்கப்பட்டடுள்ள பொருளாதார கொள்கைகளில் படி, புதிய முலீடுகளை ஈர்க்க மேற்கொண்டு செய்யப்படவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை மாற்றம்தான் இன்றைய கூட்டத்தின் ஹைலைட் என்கிறார்கள். சர்ச்சையில் சிக்கிய 2 மூத்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும என்றும், புதிதாக சிலர் அமைச்சராவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா பறிக்கப்பட்டு பதிலாக சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூடவே 10 அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் ஏராளமான ஆச்சர்யங்கள் இருக்கப்போவதாக கோட்டை வட்டாரங்களில் செய்தி அடிபடுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com