

கோவை சூலூர் சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் உக்கம்பட்டி காடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
இன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறி வீடு கட்ட நிலம் தருவதாக கூறினர்.அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
சேலம் கலெக்டர் இளம்பகவத், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.