#BREAKING : சென்னையில் நாளை நடைபெறவிருந்த விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து..!

VIJAY
VIJAYsource:dinamani
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி. நகர் ஆகிய நான்கு தொகுதிகளில், நாளை த.வெ.க தலைவ விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுமே மிகவும் நெருக்கடியான பகுதிகள் என்பதால், தேர்தல் கமிஷன் மற்றும் சென்னை காவல்துறை தரப்பில், தவெகவிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன், விஜய் பிரச்சாரத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய விஜய் அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்த பின், வரும் 7 அல்லது 8ம் தேதியில், விஜய் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் நாளை த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.காவல்துறை விதித்திருந்த நேர கட்டுப்பாடுகளை செயல்படுத்த முடியாது என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.குறைவான நேரம் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதி வழங்கியதால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com