

த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஈரோட்டில் நடைபெற உள்ளது.மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.
அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னையில் இருந்து விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது.விஜயின் வருகையால் சேலம் கோவை நெடுஞ்சாலை பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. மக்கள் கூட்டம் நெடுஞ்சாலையில் 2 பக்கமும் நின்று விஜயை வரவேற்கின்றனர்.
200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் விஜயின் காரை பின் தொடர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் விஜய் த.வெ.க. பொதுக்கூட்டம் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.