

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் சாலை மார்க்கமாக தஞ்சை செங்கிப்பட்டிக்கு தனது காரில் சென்ற விஜய் வழக்கம் போல தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்புடன் தஞ்சையில் உரையாற்றுகிறார் விஜய் ."தளபதி" "தளபதி" என்னும் கோஷம் எழுப்பிய படியே கட்சிக்கொடியை கையில் தாங்கி விஜய் சென்ற வழிநெடுகிலும் தொண்டர்கள் படை அவரை சூழ்ந்தது எனினும் காவல்துறையினர் அவர்களை விலக்கி தங்கள் கடமையை செய்தனர்.
மற்ற பரப்புரை கூட்டங்களில் விஜயைக் காண தொண்டர்கள், பொதுமக்கள் என கட்டற்ற கூட்டம் கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிலும் குறிப்பாக 4900 பேர் என்ற கணக்கில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலில் தடம் பதித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார். குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவம் மற்றும் ஜனநாயகம் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெறாமல் முடங்கியது இவற்றுடன் தற்போது இவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு என பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் பரப்புரைக்காக உற்சாகம் குறையாமல் தற்போது தஞ்சாவூர் வந்துள்ள விஜயின் அடுத்த "டார்கெட்" என்னவாக இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தவெக தொண்டர்கள் மற்றும் மக்கள்.
தான் கலந்து கொள்ளும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை தாக்கி பேசும் விஜய் அந்தந்த பகுதியில் இருக்கும் பிரச்சனைகளையும் கோடிட்டு காட்டுவது வழக்கம் அதுபோல் தஞ்சையிலே என்ன பேசப் போகிறார் என்பதில் அரசியல் வட்டாரங்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலில் பேசிய தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் ரா விஜய் சரவணன் பேசியதாவது,
32 ஆண்டுகளாக விஜய் ரசிகராக இருந்து தற்போது தவெகவின் தஞ்சை மாவட்ட கட்சியின் தலைவராக இருக்கும்
ரா விஜய் சரவணன் " காவிரி டெல்டா வின் 32 மாவட்டங்களிலும் இனி எந்த கட்சிக்கும் டெபாசிட் கிடைக்காது.. நமது தவெக தான் நல்ஆட்சியமைக்கும்.. அதில் நமது தளபதிதான் முதலமைச்சர்..அதற்காக நாம் அனைவரும் பாடுபடுவோம் " என்று சூளுரைத்தார்.
வேளாண்மை , கூட்டுறவு போன்ற துறைகளில் பொறுப்பு வகித்த திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது தவெகவில் இணைந்த கு. ப கிருஷ்ணன் தனது அழகுத் தமிழில் கணீரென தனது உரையை நிகழ்த்தினார்
"ஐந்து மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமனம் செய்திருக்கிறீர்கள் .உங்கள் அன்பிலே கட்டுண்டு கிடக்கிறோம். வெற்றியை உங்கள் காலடியில் வைப்போம்" என்று உறுதி கூறினார்.
தொண்டர்களின் கரகோஷங்கள் முழங்க கழுத்தில் பச்சை துண்டு அணிந்த விஜய் சரியாக 11:30 மணிக்கு மேடையில் ஏறி தனது உரையை நிகழ்த்தினார் அந்த உரையிலிருந்து சில துளிகள் இங்கு.
சென்ற முறை வேலூரில் பேசிய போது சொல்லி இருந்தேன். தமிழ்நாடு தான் விஜய் விஜய் தான் தமிழ்நாடு என்று .ஏன் அப்படி சொன்னேன் தெரியுமா? தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும்தான் இருக்கிறோம் என்பதற்காக தான் கூறினேன்.
தமிழ்நாட்டை என்றால் திமுக தான் தமிழ்நாட்டை காப்பாற்றுவது ஸ்டாலின் தான் இதெல்லாம் இனி ஒர்க் அவுட்டே ஆகாது .சின்ன பசங்க கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர் "ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி" என்று.
கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுகா கூட பார்க்க முடியாது .அப்படி இருக்கும்போது கிரிக்கெட்டிலும் விசிலை போடுவது சிஎஸ்கே தான் தமிழ்நாடு தான். வரப்போற எலக்ஷனிலும் விசிலை போடப்போவது நமது டிவிகேதான் தமிழ்நாடு தான் டிவிகே . டிவிகே தான் தமிழ்நாடு.
தேர்தல் பற்றியும் கூறியிருந்தேன் தமிழ்நாடு vs ஸ்டாலின் சார் அதாவது விஜய் vs ஸ்டாலின் சார். இது தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல். இதையேன் தமிழ்நாட்டை தாண்டி பேசுகிறீர்கள் என்று கேட்டேன். உடனே விஜய் பாஜகவை சேர்ந்தவர் என்று திரித்து பேசினார்.
இது தமிழக சட்டமன்ற தேர்தல் என்பதால் டெல்லியா என்ற உடனே பாஜகவிற்கு பயந்துவிட்டதாக கூறுகிறார்கள் . ரெய்டு வந்தால் வெள்ளைக்கொடி பிடிப்பது யார் என்று தெரியும். மற்றவர்களுக்கு தான் இது எலக்சன் தமிழக மக்களுக்கு இது ஒரு எமோஷன்
உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம் .ஏதேனும் பிரச்சனை என்றால் வக்கீலிடம் செல்வோம் .ஆனால் நாம் சாப்பிடும் போது ஒரு மனிதரை நினைக்கிறோம் என்றால் அது உணவு தரும் விவசாயிகள் தான் கடவுளுக்கே படையல் போடுகிற உயர்ந்த மனிதர்கள் தான் விவசாயிகள் பூமியை அழகாக மாற்றி சாமி ஆக்கி காட்டுவதில் விவசாயிகளுக்கு அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனக்கு விவசாயம் பற்றி அதிகம் தெரியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன் அடுத்தவர்களைப் போல் நானும் விவசாயி தான் என்று உங்கள் காதுகளில் டால்டா ஊற்றுவதில் ஊற்ற நான் வரவில்லை.
எனக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு குடும்ப உறவு அண்ணன் தங்கை அம்மா பையன் அப்பா பையன் உறவு
அடிப்படை பிரச்சனை பற்றி பேசுவோமா? சிறிது நாட்களுக்கு முன் ஐநா சபையின் தண்ணீர் திவால் என்ற கட்டுரையை படிக்கும் போது மனது பதறுகிறது தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். காரணம் நிலத்தடி நீரை பாதுகாக்க காக்காமல் விட்டதுதான் .
மணல் கொள்ளைகளை ஈடுபட்டவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை மறந்து விட்டீர்களா ? மணல் மாஃபியா குரூப்புக்கு ஆதரவு தருவது யார் உங்கள் திமுக ஆட்சி தான் அது இல்லை என்று மறுக்க முடியுமா ? உங்களால் தண்ணீர் திவாலாக போகிறது மணல் ,கனிம வளம் திவாலாக போகிறது .மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடு திவாலாக போகிறது.
கடன் வாங்கி கடன் வாங்கி திமுக ஆட்சியில் குப்புற படுத்து விட்டது . ஆட்சியின் கடைசி காலத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பெரிய பெரிய திட்டங்கள் உடனடியாக துவங்கப்படும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் ஐந்தாண்டுகளுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
திமுக இரண்டாவது முறையாக தொடர்ந்த ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை ஸ்டாலினின் தந்தை கருணாநிதி கூட தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக வென்றது இல்லை. தவெகவிற்கு எதிராக திமுக மற்றும் அதிமுக இணைந்து சதி செய்கிறது. தவெக மீது பழி போடும் சதிக்கு திமுக அதிமுக டீலிங் போட்டு செய்கிறது.
கரூர் சம்பவத்தில் ஆரம்பித்து ஜனநாயகம் திரைப்படம் வரை சதி தொடர்கிறது. ஜனநாயகன் படத்துக்கு ஸ்டாலின் சாரும் சிறிது குரல் கொடுத்தார் அதற்காக எனது நன்றிகள் .
திமுக வாக்குறுதிகள் என்ன ஆனது? கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 100 கரும்புக்கு ஆதார விலை ரூபாய் 4000 போன்ற என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? பிரச்சனைகளை முதலில் பாருங்கள் ..பிறகு கலைஞருக்கு சிலை வைப்பது பற்றி பாருங்கள்.
இன்னொரு முக்கியமான ஒன்று மாநில மத்திய அரசாலே முடியாது என்று தெரிந்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்று சொன்னது .
என்னை முடக்கலாம் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை முடக்கிவிட முடியுமா?
1000 ரூபாய் கொடுத்து ஏமாற்ற நினைத்தார் ஸ்டாலின் தற்போது ரூபாய் 5000 கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்துள்ளார்.
எங்கள் ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி ..
5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடனை 50 சதவீதம் தள்ளுபடி குறித்து ஆலோசனை செய்யப்படும்..
இரண்டு ஏக்கருக்கு குறைவானவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்..
கல்வி ,மருத்துவம் ,ரேஷன் ,பஸ் வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் தரும் .
நமது குழந்தைகள் நமது இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை தரப்படும். அரசு வேலை வாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் வாய்ப்பு தரப்படும் .
நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கமிஷன் இருக்காது.
500 குடும்ப அட்டைகளுக்கு அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். பெண்களுக்கு பெண் எடையாளர். ஆண்களுக்கு ஆண் எடையாளர் பணியாற்றுவர்.
நியாயவிலைக் கடைகள் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்.
ஊழலே செய்யாதவர்கள் நாங்கள் என்றும் ஊழல் செய்ய மாட்டோம் என்றும் யாராலும் சொல்ல முடியாது
"ஊழலற்ற ஆட்சி அமைய இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே உண்மையாக தருவீர்களா இந்த விஜய தம்புகிறீர்களா?" எனக் கூடியிருந்த தொண்டர்களிடம் உறுதிமொழி வாங்கினார் விஜய்.
மேலும் "மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா விஜய் வேண்டுமா ஸ்டாலின் சார் வேண்டுமா? எங்கள் ஓட்டு எங்கள் உரிமை இதை யாரும் விலைக்கு வாங்க முடியாது எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான் யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம் இது நிஜம் என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே" என்று உறுதிமொழி வாங்கி தனது உரையை முடித்துக் கொண்டார் விஜய்.