

ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து மீண்டும் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து சில தினங்கள் ஆகிவிட்டது. தமிழகத்துடன் சேர்த்து மொத்தம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் மட்டும் தொடர்ச்சியாக குழப்பங்கள் நிலவு வருகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, எண்ணிக்கை அடிப்படையில் பெரிய கட்சியாக இருந்தாலும் அதனால், தனி பெரும்பான்மை பெற முடியவில்லை. அதைத் தொடர்ந்து அந்த கட்சிசார்பில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளிடம் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அதிமுக விஜய்க்கு ஆதரவு அளிக்க முக்கிய நிபந்தனைகளை விதித்தது. அதில் ஒன்று , தவெகவிற்கு முதன் முதலில் ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியை விலக்கினால் மட்டுமே, அதிமுக ஆதரவு கொடுப்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து விஜய் தினமும் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார். ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். மேலும் முழு பெரும்பான்மையுடன் அதிமுக, திமுக கட்சிகள் வந்தாலும் தான் பதவி பிரமாணம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளிடமும் தவெக சார்பில் ஆதரவு கேட்டு பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டதால் , அடுத்ததாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது , நேற்று பாலன் இல்லத்திற்கு விஜய் நேரடியாக சென்ற பின்னர், அவர்களின் ஆதரவு கடிதமும் கிடைத்தது. இறுதியாக விஜய்க்கு இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்பட்ட சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
இன்று விடுதலை சிறுத்தைகளின் ஆதரவும் கிடைத்து விட்டதால் , விஜய் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது , ஆளுநர் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்காதது தெரிந்ததால் அவர் தனது பட்டினம்பாக்கம் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் அர்லேக்கர் இன்று இரவு கேரளா செல்ல இருந்த நிலையில் பயணம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது மேலும் இன்று மாலை ஆளுநரை 6 30 மணிக்கு சந்திக்கிறார் விஜய்.
தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் இன்று மாலை 7 மணிக்கு கேரளா செல்லும் திட்டத்தை நிறுத்தியுள்ளதால் , தற்போது விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.