விஜய்
விஜய்Vijay Kumar

விஜய் அரசியலின் அடுத்த மூவ்.. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்!

Published on

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் வருவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மைகாலமாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளின் கூட்டம் வரும் சனிக்கிழமை பனையூரில் உள்ள அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அந்த இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்தை கொண்டு செல்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணியுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், மகளிரணியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள 10 அணிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com