மீண்டும் விபத்து - விஜய் வாகனத்தை ஆபத்தான முறையில் பின்தொடரும் தொண்டர்கள்..!

Vijay TVK Election Campaign
Vijay TVK Election Campaign
Updated on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்யும்போது தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் பைக்கில் ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய செல்லும் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து வரும் தொண்டர்கள் வாகனத்தை நெருங்கும் சமயம் பொத்தென்று விழுந்தனர். அதேபோல் குறுகிய சாலைகளில் பைக்குகளில்  விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து வந்த தொண்டர்கள் பைக்குகளில் இருந்து கீழே விழுந்தனர். இது எதையும் கண்டுகொள்ளாமல் விஜயின் வாகனம் பயணித்தது. ஆர்வ மிகுதியால் விஜய் வாகனத்தை ஆபத்தான முறையில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். செல்லும் வழி எங்கும் கூட்டம் அலைமோதியது. வழியில் ஒரு தொண்டர் விஜயின் வாகனத்திற்கு முன்பு தடாலென்று கீழே விழுந்து கும்பிட,  தொண்டரை அலேக்காக தூக்கி அப்புறப்படுத்திய பவுன்சர் என்னடா பண்ற சாமி கும்பிடுகிற இடமா இது என்று சொல்லியபடி அப்புறப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
வீடு வீடாக 'விசில்' கொடுத்து ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்..!
Vijay TVK Election Campaign
logo
Kalki Online
kalkionline.com