கையில் சிகப்பு கயிறு! நெற்றியில் திலகம்! Dress Code-ஐ மாற்றிய விஜய்..!

நேற்று ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய் நெற்றியில் திலகமிட்டு, வலது, கை மணிக்கட்டில் சிகப்பு நிறத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தார்.
vijay dress code
vijay dress codesource:oneindiatamil
Updated on

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள், கடந்த மே 4ம்தேதி எண்ணப்பட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்துக்கொண்டு இருந்தார். காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக உடனான உறவை முறித்துக்கொண்டு 5 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆதரவு அளித்தது.

இதனையடுத்து கடந்த 5-ந்தேதி 113 ஆதரவுடன் ஆளுநரை சந்தித்த நிலையில் கடந்த 7-ந்தேதி பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் பதவி ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : மீண்டும் ஆளுநரை சந்திக்க செல்லும் விஜய்..!
vijay dress code

ஆனால், ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுக்கவில்லை. 118 எண்ணிக்கையை கேட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஏற்பாடு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரண்டு இடதுசாரி கட்சிகள் ஆதரவை தவெக வென்றதையடுத்து தற்போது தவெகவின் பலம் 116-ஆக அதிகரித்தது.இந்தியன் முஸ்லீம் லீக், விசிக ஆதரவை கொடுத்தப்பதாக தகவல் வெளியானது. இதனால் தவெக வின் பலம் 120 ஆக உயர்ந்தது

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் ஆளுநரை 3-வது முறையாக சந்தித்து பேசினார் . ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உரிமை கோரினார்.இதனால் நாளை விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் பரவின. விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக விஜய் காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வலம் வந்தார். ஆனால் நேற்று ஆளுநரை விஜய் சந்திக்க சென்ற போது வழக்கத்திற்கு மாறாக ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

முதல் இரண்டு முறை ஆளுநரை சந்தித்தபோது காக்கி பேண்ட் அணிந்து சென்ற விஜய்க்கு தோல்வியே மிஞ்சியது. ஆனால் நேற்று 3-வது முறையாக ஆளுநரை சந்திக்க சென்ற போது ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றார்.

அதுமட்டுமின்றி நேற்று ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய் நெற்றியில் திலகமிட்டு, வலது, கை மணிக்கட்டில் சிகப்பு நிறத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தார். இதுவரை விஜய் அவரது கையில் காப்பு ஒன்றை அணிந்திருப்பார். ஆனால் நேற்று புதிதாக அவரது கையில் கயிறும் இருந்தது. இது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் ஜோதிடரின் சில கருத்துகளை விஜய் கேட்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் ஆர்லேகர் அழைக்கவில்லை. விசிக (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) விஜய்க்கு இன்னும் ஆதரவு அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்த சூழலில் தான் விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவே உள்ளது எனவும் இதனால் தான் விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறாது என்று கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com