

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நேரடியாகப் பொதுக்கூட்டத் திடலுக்குச் செல்கிறார். அங்கு பிரத்யேகப் பிரச்சார வாகனத்தில் நின்றபடி, திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.
விஜய்யின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காமல் இருக்கவும் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய நுழைவாயிலில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன், பயணிகளைத் தவிர தேவையின்றி உள்ளே நுழைபவர்களை விசாரணை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன் கோவை விமான நிலையத்திற்கு வந்தார் விஜய். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்
விஜய்யைக் காண அதிகாலை முதலே விஜயமங்கலம் சரளை பகுதியில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருவதால் அந்த இடமே உற்சாகத்தில் காணப்படுகிறது. தற்போது கோவை வந்தடைந்த விஜய்க்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வரும் நிலையில், அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டத்திற்குப் புறப்பட்டுள்ளார்.