

கரூரில் நடைபெற்ற த.வெ.க. அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணைத் தகவல்களை அறியத் தமிழக மக்களும், த.வெ.க. தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
முன்னதாக தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை டெல்லி வரவழைத்து 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து விஜயை விசாரணைக்கு இன்று ஆஜராக சம்மன் அனுப்பியது சிபிஐ . இதைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்கு தனி விமானம் மூலம் வருகை தந்தார் விஜய்.அவருடன் அருண் ராஜ் ஆதவ் அர்ஜுனா மற்றும் தனி அலுவலர், பர்சனல் செக்யூரிட்டி உள்ளிட்ட தவெகவினர் 9 நபர்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு டெல்லி சிபிஐ விசாரணைக்கு உள்ள நிலையில் நிலையில் இதுவரை எப்போதும் இல்லாத பாதுகாப்பு வளையத்தில் சிபிஐ அலுவலகம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கக்கூடிய அரசு கட்டிடங்கள். பரிசோதனை செய்யும் அலுவலக பகுதியில் ஆங்காங்கே (Barricades) அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிரத் தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. திரண்டு வரும் ரசிகர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சி.பி.ஐ. தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதி முழுவதையும் தீவிரமாகச் சோதனை செய்துள்ளனர். சி.பி.ஐ. அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுமையாக மூடப்பட்டு, அங்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பலகட்டப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. விஜய்யிடம் நடத்தப்படும் இந்த விசாரணை இன்று நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.