#BREAKING : திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்ததா..? நிபந்தனையுடன் தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு..!

RAHUL GANDHI - VIJAY
RAHUL GANDHI - VIJAY image : deccan chronicle
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர உள்ள தவெக கட்சி முதல்வர் நாற்காலியில் அமரத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளனர். தங்களிடமுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளனர்

சற்று நேரத்தில் தவெக காங்கிரஸ் இடையிலான கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் விஜயை சந்தித்த ஐந்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வழங்க ஏற்பாடு. சற்று நேரத்தில் தவெக தலைவர் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வருகிறார் என்றும் அங்கு வைத்து தவெக காங்கிரஸ் இடையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஆளுநரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் விஜய்.

அறுதிப் பெரும்பான்மை இல்லை என்றாலும் கூட தனிப்பெரும் கட்சி எனும் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டம் எனத் தகவல்.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவு விஜய்க்கு முதல்வராகும் வாய்ப்பை பலப்படுத்தும். மேலும் நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழங முதல்வராக பதவி ஏற்க உள்ளார் விஜய் . இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுமார் 5000 பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com