"கடைசி நேரத்தில் விஜய் எடுக்கும் மாஸ்டர் பிளான்!" – நந்தனத்தில் தவெக மாநில செயல்வீரர்கள் கூட்டம்..!

TVK Actor Vijay
TVK Actor Vijay
Updated on

எதிா்வரும் 23.4.2026 தமிழக தோ்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தோ்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு் கொண்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறாா்கள்.

இந்நிலையில் தவெக தலைவரான ஜோசப் விஜய், அவ்வளவாக பிரச்சாரம் செய்ய இயலாத நிலையில் ,ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு இடங்களில் தோ்தல் பிரச்சாரம் செய்வது திடீா் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மிகவும் சோா்வடைந்து போனதும் நிஜமே!

இந்நிலையில் 21.4.2026 மாலை ஐந்து மணிவரை பிரச்சாரம் செய்யலாம் அதற்கு மேல் அரசியல் கட்சிகள்எந்தவித பிரச்சாரமும் மேற்கொள்ளக்கூடாது.இது நடைமுறை

அன்றைய தினம் 21.4.2026-ல் தவெக கட்சியின் மாநில செயல்வீரர்களின் கூட்டத்தை நந்தனம் பகுதியில் விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த கூட்டத்தில் தோ்தலை எப்படி எதிா்கொள்வது தோ்தல் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு தனது பணிகளை செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

எது எப்படியோ இந்த செயல் வீரர்கள் கூட்டமாவது அவரது தொண்டர்கள் எதிா்பாா்த்தவாறு நடந்தால் சரி"

logo
Kalki Online
kalkionline.com