#JUST IN : சேலத்தில் விஜய் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்..மீண்டும் மக்கள் கூட்டத்தில் விஜய்..!!
சுமார் ஒன்றரை மாதம் கழித்து தேர்தல் பரப்புரைக்காக மாங்கனி நகரான சேலம் வந்துள்ள விஜய்க்கு சேலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையிலிருந்து தனி விமானத்தில் கிளம்பிய விஜய், சரியாக முற்பகல் 11:30 மணிக்குச் சேலம் விமான நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் இடமான சீலநாயக்கன்பட்டிக்கு அவர் காரில் புறப்பட்டார். விஜய் செல்லும் வழியில் கமலாபுரம் விமான நிலையம் முதல் புளியம்பட்டி வரை 450-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சேலம் விமான நிலையச் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் தனது காரிலிருந்து தொண்டர்களை நோக்கிக் கையசைத்தபடி சென்றார்.
விஜய்யின் கார் சுங்க சாவடி அருகே வந்தபோது பைக்குகளில் விஜய் காரை தொடரும் தொண்டர்களுடன் மேலும் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் விஜய காரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் திரண்டதால், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், கூட்டத்தை விலக்கி ஆம்புலன்ஸ் தடையின்றிச் செல்ல வழிவகை செய்தனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு தொண்டர்களுக்குத் தவெக தலைமை ஏற்கனவே பயிற்சி அளித்திருந்தது. இருப்பினும், எப்படியாவது விஜய்யைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அலைமோதிய ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தொண்டர்களை ஓரளவு ஒழுங்குபடுத்திய முயற்சிக்குப் பலன் கிடைத்தது.
விஜய்க்கு ஆதரவளிக்கும் இளம் தலைமுறைகளுடன் பெண்களும் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஎப்போதும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கூட்டம் நடைபெறும் இடத்தில் மட்டுமே கூட்டம் இருப்பது வழக்கம் ஆனால் தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு அவர் வரும் வழி எங்கும் ரசிகர்கள் கூடியிருப்பது ஆச்சரியம் தரும் விஷயமாக தான் உள்ளது அரசியல் களத்தில். விஜயை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் ஒருநாள் சம்பளத்தை கூட விட்டுவிட்டு வரும் அவரது ரசிகர்கள் அவரது வெற்றிக்கு உதவுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

