#BREAKING : நெசவாளர் குடும்பங்களுக்கு வருடம் ரூபாய் 30,000 வழங்கப்படும் - விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!

vijay
vijay
Updated on

வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில்  போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் செய்தார்.

அவினாசி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் வேனில் நின்றபடி ரோடு ஷோ சென்று  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த விஜய்  பெருமாநல்லூர் நால்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டு செங்கோட்டையனுக்கு வாள் பரிசளித்து கரகோஷங்களைப் பெற்றார்.

திருப்பூர் பெருமாநல்லூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்  "என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல் தங்கங்களே திருப்பூர் பகுதி மக்களே" எனத் துவங்கியதும் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய விஜய்  ஏப்ரல் 16 தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கை வெளியிடப்படுகிறது என்றும் அதற்குள் தவெக வின் தேர்தல் வாக்குறுதிகளை இங்கு அறிவிக்கிறேன் எனக் கூறி வாக்குறுதிகளை வழங்கினார்.

நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் விற்க இ-காமர்ஸ் உருவாக்கப்படும்.

முக்கிய இடங்களில் தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூபாய் பத்து லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

கைத்தறி விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு வருடம் ரூபாய் 30,000 வழங்கப்படும்.

கைத்தறிகளுக்கான இலவசம் மின்சாரம் 500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். நெசவாளர் உற்பத்தி செலவு குறைப்பதற்காக 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

நெசவாளர் ஓய்வு ஊதியம் ரூபாய் 3000 ஆக உயர்த்தப்படும்.

நாட்டில்  MSMEமூடப்பட்டதால் ஜவுளித்துறையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
MSME மூடப்பட்டது தான் திமுக அரசின் சாதனை.

விவசாயிகளின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 100% மின்சார  விலக்கு அளிக்கப்படும் .

விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் .
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம்.

விரிவான ஆய்வுக்கு பின் மின் கட்டணம்
மின் கட்டணம் முறைப்படுத்தப்படும் .

நெருக்கடியில் உள்ள சிறு குறு நடுத்தர தொழிலாளர்களை பாதுகாக்க ரூபாய் 15,000 நிதி உதவி அளிக்கப்படும் .

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

காவலர்களின் அடிப்படை ஊதியத்தை ரூபாய் 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். காவலர் நலன் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

காவலர்களுக்கு மாதம் ரூபாய் 1000 கூடுதல் பணிப்படி வழங்கப்படும் . அதிக அழுத்த பணிசுமை கொண்ட
காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை செய்யப்படும்.

மேலும் பெண் காவலர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற பணி மற்றும் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த விஜய் மக்கள் அனைவரும் என்னை நம்பலாம் . நான் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று உறுதியளித்து வணங்கி வாக்குகளை சேகரித்து உரையை முடித்தார் விஜய்.

விஜய்யின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த த.வெ.க. வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது என்றும்  அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து குடிநீர் வழங்கிய நிலையில் மேலும் 7 பெண்கள் உள்பட 9 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் மயக்கம் என சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com