#BREAKING : விஜய் வீட்டின் வெளியே 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு..!

vijay
VIJAYimage source:youtube
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஜய் இன்று சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். ஆயிரம் விளக்கு, தி நகர் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந் நிலையில் விஜயின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை பாதுகாப்பில் குறைபாடு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை திரளான ரசிகர்கள் விஜயின் வீட்டின் வெளியே சூழ்ந்த நிலையில் பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டின் வெளியே குவிக்கப்பட்டுள்ளது. 2 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. 6 காவல் ஆய்வாளர்கள், 8 எஸ்.ஐ. என சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 3 மணி அளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்பும் விஜய்க்கு பாதுகாப்பாக சுமார் 10 ஜீப்களில் விஜயின் வாகனத்தை போலீசார் பின் தொடர உள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com