#BREAKING : வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார்..!

Vil ambu director
Vil ambu director
Updated on

“தா” மற்றும் “வில் அம்பு” திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் சற்று முன் காலமானார். நாளை காலை கோவை சுகுனாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், 2016ல் வெளியான 'வில் அம்பு' படத்தின் மூலம் இயக்குநரானார். 'மாநகரம்' ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் 'வில் அம்பு'வை சுசீந்திரன் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் சுப்ரமணியம், சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 49. நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com