பிரபல வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவு!

வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்
வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்

பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் தனது 94 வது வயதில், வயது முதிர்வின் காரணமாக இன்று சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில்மக்களிடையே தேச பக்தியை வளர்த்து வந்தவர்.

இவர் வில்லுப்பாட்டின் குரு மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்கள் ஆவார்கள்.

சுப்பு ஆறுமுகம்
சுப்பு ஆறுமுகம்

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை பல்வேறு மேடைகளில் நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன்வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம்போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

1975ம் ஆண்டுகலைமாமணி விருதும் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார். 2021ம் வருடம் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது.

சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு இசை துறைக்கு பெரிய இழப்பு என்று இசை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com