பாலியல் புகாரில் சிக்கிக்கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர்!

Vin Diesel.
Vin Diesel.
Updated on

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ‘தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த வரிசையில் வந்த எல்லா பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அடுத்த பாகமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வின் டீசல் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அதுவும் இந்த குற்றச்சாட்டு 13 வருடங்கள் கழித்து கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஆம் ஆண்டில் வின் டீசலுக்கு உதவியாளராக இருந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 2010ல் ஒரு படப்பிடிப்பின்போது வின் டீசல் பல பெண்களுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்தார். 

அதிகாலையில் அந்த ஹோட்டலுக்கு புகைப்பட கலைஞர்கள் வருவதை அறிந்து அந்த பெண்களை அப்புறப்படுத்தினோம். ஹோட்டலில் இருந்து அவரை சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான பணியை என்னிடம் கொடுத்தார்கள். ஆனால் அந்த பெண்கள் அனைவரும் சென்று விட்டதால், தனியாக இருந்த என்னிடம் வின் டீசல் மோசமாக நடந்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி நான் நடந்து கொள்ளாததால், உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டேன். அந்தப் பணியில் இருந்து என்னை நீக்கியது அவரது சகோதரி தான் என வின் டீசல்  மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார் ஆஸ்ட்ரோ ஜோனாசன். 

இதையும் படியுங்கள்:
79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ஹாலிவுட் நடிகர்!
Vin Diesel.

13 ஆண்டுகள் கழித்து ஒரு பிரபலமான ஹாலிவுட் நடிகர் மீது, அவரது உதவியாளரே பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

logo
Kalki Online
kalkionline.com