ஹரியானா சட்டசபை தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி!

Vinesh Phogat
Vinesh Phogat
Published on

ஹரியானாவில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றியடைந்துள்ளார்.

ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக இந்த தேர்தலில் 89 இடங்களில் போட்டியிட்டது. அதேபோல் காங்கிரஸும் 89 தொகுதிகளில் போட்டியிட்டது.  மூன்று கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தனியாகவும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் போட்டியிட்டன.

அந்தவகையில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வினேஷ் போகத் வென்றிருக்கிறார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரை இந்திய மக்களால் மறக்கவே முடியாது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், மிகச்சிறப்பாக விளையாடினார். மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் கலந்துக்கொண்ட வினேஷ் போராடி வெற்றி வாகை சூடினார். ஆனால், அடுத்த நாளே அவருடைய எடை 50 கிராம் அதிகமானதாக கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று ஒலிம்பிக் நிர்வாகம் கூறிவிட்டது.

இதற்கிடைய அந்த 50 கிராம் எடையை குறைக்க ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் மனமுடைந்துபோன வினேஷ் போகத், தனது ஓய்வையும் அறிவித்தார்.

இதனையடுத்து வினேஷ் போகத்திற்கு நாட்டு மக்களின் பேராதரவு கிடைத்தது. மேலும் நாடு திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனையடுத்து ஹரியானாவின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதையும் படியுங்கள்:
News 5 – (08.10.2024) குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை!
Vinesh Phogat

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத்திற்கு போட்டியாளராக இருந்த பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் பின்னடைவை சந்தித்தார். இறுதியாக 15 சுற்றுகள் முடிவில் 65080 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 59065 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com