அந்தரத்தில் நடக்கும் அத்துமீறல்கள்!

அந்தரத்தில் நடக்கும் அத்துமீறல்கள்!
Published on

சமீபகாலமாகவே விமானத்தில் செல்லும் பயணிகள் சக பயணிகளுடன் மோதலில் ஈடுபடுவது அல்லது விமான பணிப்பெண் குழுவிடனருடன் வாக்குவாதம் செய்வது, ஒழுங்கீனமாக நடப்பது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில சம்பவங்கள் வெளியில் தெரியாமலேயே இருந்துவிடுகின்றன.

அண்மையில் விமானப் பயணி ஒருவர் கழிப்பறையில் புகைப்பிடித்ததாக பிடிப்பட்டார். குடிபோதையில் இருந்த அவர், விமானப் பணிப் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மற்றொரு சம்பவத்தில், ஒரு பயணி, சக பெண் பயணி கழிப்பறைக்குச் சென்ற சமயத்தில் அவரது இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டார்.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி புதுதில்லியிலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகள் குடிபோதையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று ஏர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. பின்னர் இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்த்தும் விசாரணை நடந்து வருவதாகக் கூறி சமாளித்தது. பின்னர் இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட பயணிகள் இருவரையும் விமானநிலைய போலீஸார் கைது செய்ததாக தகவல் வெளியானது.

இதனிடையே திங்கள்கிழமை (ஜனவரி 23) தில்லியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த ஒருவர், விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒழுங்கு மீறி நடந்து கொண்டாராம். இதில் அந்த நபருக்கு ஆதரவாக மற்றொரு பயணியும் பேசினாராம்.

இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியும், அவருக்கு ஆதரவாக பேசிய மற்றொரு பயணியும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னரே விமானம் புறப்பட்டுச் சென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com