சப்பாத்தி சுடும் பில்கேட்ஸ்! இணைய உலகினை கலக்கும் வைரல் வீடியோ!

சப்பாத்தி சுடும் பில்கேட்ஸ்! இணைய உலகினை கலக்கும் வைரல் வீடியோ!

இந்திய உணவுகள் மீதும், இந்திய கலாச்சாரம் மீதும் முன்பைவிட அதிகப்படியான புரிதலை தற்போது வெளிநாட்டினர் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்திய உணவான சப்பாத்தி சமைத்துள்ள வீடியோ சமுக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்த வீடியோவில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் பில் கேட்ஸ் கோதுமை மாவினை பிசைந்து, அதனை தேய்த்து சப்பாத்தி கல்லில் சுடுவது வரையில் அவருடன் சேர்ந்து செய்தார். இந்த வீடியோ தற்போது டிவிட்டர் உட்படப் பல சமூகவலைத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து சாப்பத்தி செய்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவியுள்ளது உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் இளம் வயதிலேயே பில்லியனர் ஆன பெருமைக்கு உரியவர் பில் கேட்ஸ். சமீபத்தில் அவருடைய மனைவி உடனான விவாகரத்து, எலான் மஸ்க் உடன் கருந்து வேறுபாடு ஆகியவற்றின் மூலம் சோகத்தில் இருந்தார் பில் கேட்ஸ் .

இதை அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றும் வகையில் பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் கர்ப்பமாக இருக்கும் செய்தி மூலம் தான் தாத்தாவாகப் போகும் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்தார்.

தாத்தா ஆகப் போகும் மகிழ்ச்சியுடன் 2023 புத்தாண்டைத் துவங்கிய பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் சாப்பத்தியை ஆரம்பம் முதல் தயாரித்த வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் தனது இந்திய பயணத்தில் போது பீகார் மாநிலத்தில் கோதுமை விவசாயிகளைச் சந்தித்துக் கோதுமை பயிரிடுவதில் இருந்து அறுவடை செய்வது வரையில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப மாற்றங்களைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார். ஒரு கேன்டீனில் பெண் ஒருவர் தனக்கு எப்படிச் சப்பாத்தி அதாவது ரோட்டி செய்வது எப்படி எனத் கற்றுக்கொடுத்தாகத் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அதனை பில் கேட்ஸ் உடன் சேர்ந்து ட்ரை செய்யப் போவதாகப் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணைய உலகினை கலக்கி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com