மணமக்களுக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கான் ... வைரலான வீடியோ!

மணமக்களுக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கான் ... வைரலான வீடியோ!

திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அந்த வகையில் ஜெய்ப்பூரில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணுக்கு அளித்த பரிசு மணப்பெண்ணை மட்டுமல்லாது, காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இவருக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். தமிழில் உயிரே படம் மூலம் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார். ஷாரூக் கான் & தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 23 ஆம் தேதி வெளியாகி 1000 கோடிகளை அள்ளியது.

மணப்பெண்ணுக்காக நடனமாடிய மணமகன், முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மணமக்களுக்கு திருமண வாழ்த்து கூறும் ’வாய்ஸ் நோட்’ ஒன்றினை வெளியிட்டார். மேடையில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் வடிவிலான திரையில் ஷாருக்கானின் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை மணமகன் ஏற்க, அதில் ஷாருக்கான், “வணக்கம் கின்னரி. வணக்கம் சஞ்சீத். இது ஷாருக். உங்களுக்கு திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒன்றாக, மகிழ்ச்சியாக, அன்புடன் இருக்க வேண்டும் ” என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறுகிறார்.

shahrukh khan
shahrukh khan

இதனை கேட்டதும் மணப்பெண் வியப்பில் ஆழ்ந்து போக, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்கின்றனர். தொடர்ந்து ஷாருக்கானின் பாடல் ஒன்றுக்கு மணமகன் நடனமாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற அந்த வீடியோ, 64,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.

இது குறித்த வீடியோவை ’தி க்ரிம்சன் சர்க்கிள்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com