டொனால்டு ட்ரம்ப்பிற்கு எதிராக களமிறங்கவுள்ள இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி!

Donald trump
Donald trump
Published on

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்தாண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போதைய அமெரிக்கா அதிபராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேட்பாளராக களமிறங்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதான விவேக் ராமசாமி கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியை பூர்வீகமாக கொண்டவர். இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கு தந்தை மின் பொறியாளராகவும், தாய் மனநல மருத்துவராகவும் பணியாற்றினர். அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் பிறந்த அவர் ஹார்வர்டு, யேல் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றார்.

தேர்தலில் டொனல்டு ட்ரம்ப்பை எதிர்த்து விவேக் போட்டியிடவுள்ள விவேக் ராமசாமி தற்போதைய சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் முன்னணி தொழிலதிபராக விவேக் ராமசாமி இருந்து வருகிறார் . குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியாளர்களில் வெற்றி பெற்று, அவர்கள் ஜனநாயக கட்சி வெற்றி வேட்பாளரை எதிர்த்து களம் காண்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com