இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: குவியும் ஆதரவு!

VIVEK RAMASAMY
VIVEK RAMASAMY

இந்திய வம்சாவியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து குடியரசு கட்சியில் விண்ணப்பித்துள்ளார்.

உலகின் அதிகாரமிக்க பதவிகளில் அமெரிக்க அதிபர் பதவி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்ற அமெரிக்காவில் உள்ள ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெறும். ஆனால் அதைக் காட்டிலும் அந்த இரண்டு கட்சிகளிலும் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி அதிபர் தேர்தலை விட கடுமையான போட்டி நிலவும். இதனாலேயே வேட்பாளர் தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

அதேசமயம் அமெரிக்க அதிபர் வேட்பாளராக களம் இறங்க அமெரிக்காவில் உள்ள முக்கிய பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் கடுமையான போட்டியை இடுவர். இந்த நிலையில் குடியரசு கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட தற்போது விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளார்.

38 வயதான விவேக் ராமசாமி ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக திறம்பட செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்க விண்ணப்பித்துள்ளார்.

அதே நேரம் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவேக் ராமசாமி பற்றி சமீபத்தில் பாராட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த பாராட்டு பதிவில் விவேக் ராமசாமி பற்றி பேச நிறைய செய்திகள் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிபர் வேட்பாளர் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். முன்னாள் அதிபர் ட்ரம்ப் குறித்தும் டிரம்பினுடைய ஆட்சி நிர்வாகம் குறித்து நல்ல தகவலை பதிவு செய்தவர். அது அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், விவேக் ராமசாமி நம்பிக்கை கூறிய வேட்பாளர் என்று பாராட்டியுள்ளார். இவ்வாறு விவேக் ராமசாமிக்கான ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com