தேசபக்தியை முன்னிறுத்துங்கள் என வலியுறுத்திய விளாடிமிர் புடின்!

ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைன் மீதான போர் துவங்கிய நாளில் இருந்து போர், வர்த்தகம், வருமானம், வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகவும் பிசியாக இருக்கும் விளாடிமிர் புடின், முதல் முறையாக ரஷ்ய பில்லியனர்கள், தொழிலதிபர்கள் உடன் முக்கியமான கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

கொரோனாவுக்கு பின்பு 2022 பிப்ரவரி மாதம் இறுதியில் துவங்கிய இந்த ரஷியா உக்ரைன் போர் ஒரு வருடத்திற்கும் அதிகமாக நடந்து வருகிறது. இந்த ஒரு வருடத்தில் ரஷ்யா பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யாவை மேலும் வலிமையாக்க அந்நாட்டு பெரும் பணக்காரர்களுக்கு முக்கியமான அறிவுரை கூறியுள்ளார். இது பணக்காரர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அந்நாட்டு மக்கள் மத்தியிலும் பாசிடிவ் ஆன அணுகுமுறையை அறிவித்துள்ளது.

விளாடிமிர் புடின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரஷ்யாவின் பில்லியனர்களை லாபத்திற்கு முன் தேச பக்தியை வைக்குமாறு வலியுறுத்தினார், மேற்கத்திய தடைகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வெளிநாட்டில் முதலீடு செய்யாமல் உள்நாட்டிலேயே முதலீடு செய்யுமாறு கூறினார்.

இக்கூட்டத்தில் நாடு மற்றும் அரசின் விருப்பத்திற்கு இணையாக இங்கும் ஒரு தொழில் முனைவோர் தான் ஒரு பொறுப்பான குடிமகனாக இருக்க முடியும் என விளாடிமிர் புடின் பேசியுள்ளார். வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவிப்பது, அதை ரஷ்ய அரசிடம் மறைப்பது பெரும் தவறு. இதேபோல் நிறுவனத்தை ரஷ்யாவில் பதிவு செய்து, இங்கு முதலீடு செய்து, இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பலர் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக் கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா லெவோவா - பிலோவியயா ஆகியோர் மீது போர்க் குற்றங்களுக்காக கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com