அமெரிக்காவின் டெக்னாலஜி நிறுவனங்களை போலவே பிரிட்டனின் வோடபோன் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 11000 தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பல முக்கிய முடிவுகளை எடுத்து வரும் வேளையில் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி மிகவும் குறைவாகவோ அல்லது ஜீரோ-வாக இருக்கலாம் என கணித்துள்ளது. இதனால் நிறுவனத்தை சிறியதாகவும், எளிமையானதாகவும் மாற்ற முடிவு செய்துள்ளார். கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்களின் செலவின குறைப்பு போலவே வோடாபோனும் லாபத்தை தக்க வைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய மதிப்புடன் வலம் வந்த பிரிட்டன் நாட்டின் வோடபோன் நிறுவனம் அதிகப்படியான நிலுவை தொகையால் மாட்டிக்கொண்டது, இதற்கு மத்தியில் ரிலையன்ஸ் ஜியோ-வின் பிரம்மாண்ட 4ஜி சேவை அறிமுகத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.
ஜியோவின் போட்டியினை சமாளிக்க வோடபோன் நிறுவனம் இந்தியாவின் ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்து சில மாதங்கள் இந்தியாவில் அதிக டெலிகாம் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக வலம் வந்தது.
ஆனால் அதிகப்படியான நிலுவை தொகையாலும், வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தாலும் இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்த நிலையில் வோடாபோன் சிஇஓ Margherita Della Valle அறிவிப்பின் படி அடுத்த 3 வருடத்தில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணிநீக்கம் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு ஊழியர்களை அதிகளவில் பாதிக்கும்.