வோடபோன் - ஐடியா பணி நீக்க நடவடிக்கை? ஊழியர்கள் அதிர்ச்சி!

வோடபோன் - ஐடியா
வோடபோன் - ஐடியா

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். கடந்த சில வாரங்களில் இதன் விற்பனைக் குழுவில் உள்ள 20 சதவீத ஊழியர்கள் வோடபோன் மற்றும் ஐடியாவை விட்டு வெளியேறியதாக ஒரு அறிக்கை கூறுகிறது. குறிப்பாக உலகின் பிரபலமான டெலிகாம் சேவை நிறுவனமாக வோடபோன் குரூப் இந்தியாவில் மட்டும் இல்லாமல் அனைத்து முக்கியச் சந்தைகளிலும் வர்த்தகத்தைப் பெரும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்தது.

ஆனால் சில மாதங்களாகவே இந்தியா மட்டுமில்லாமல் பிற அனைத்து சந்தைகளிலும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் இழந்து வரும், நிலையில் தான் வோடபோன் குரூப் செலவுகளைக் குறைக்கும் விதமாக பல நூற்றுக்கணக்காக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் விற்பனைக் குழுவில் உள்ள 20 சதவீத ஊழியர்கள் வோடபோன்-ஐடியாவை விட்டு வெளியேறியதாக ஒரு அறிக்கை வந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டார செய்திகள் உலவி வருகிறது.

ஆனால் இந்த ஊழியர்கள் வெளியேறியதற்கானக் காரணம் தற்போது வரை முழுமையாகத் தெரியவில்லை. குறிப்பாக சம்பளம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை. இருந்தப்போதும் பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 986 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டும் அறிக்கையின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் சில விஷயங்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துவோடபோன்- ஐடியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலின் படி, வோடபோன் ஐடியாவில் நிறுவன பணியாளர்கள் திட்டமிடப்பட்ட நிலைகளில் 95 சதவிகிதம் மிகவும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டில் எங்களது நிறுவனப் பணியாளர்களை வலுப்படுத்தவும், டிஜிட்டல் சகாப்தத்தில் எங்களின் அடுத்த வளர்ச்சிப் பயணத்திற்குத் தயாராகவும் உள்ளோம், போட்டி மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சிறந்த திறமைகளை நாங்கள் பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதோடு பெண்களுக்கான சிறந்த பணியிடமாக வோடபோன் ஐடியாவை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் எனவும் அவதார் மாற்றம் சேரமௌன்ட் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் எனவும் கூறியுள்ளார். 2022 இன் படி இந்தியாவில் பெண்களுக்கான 100 சிறந்த நிறுவனங்களில' ஒன்றாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனகள் நீண்ட காலமாக நிதிப் பிரச்சினைகளால் போராடி வருகிறது. ஆனால் வோடபோன் ஐடியாவால் இன்னும் 5G சேவைகளை வழங்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது, அதேசமயம் ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே பல இந்திய நகரங்களில் வெளிவந்துள்ளன.

அக்டோபர் 2022 வரையிலான 19 மாதங்களில் வோடபோன் குரூப் சுமார் 38.1 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் இறுதியில் Vi க்கு சுமார் 245.62 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com