அமித்ஷா
அமித்ஷா

தமிழ்நாட்டில் வெற்றிடம்! பாஜக உழைத்தால் ஆட்சியை பிடிக்கலாம் அமித்ஷா ஆலோசனை!

Published on

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு விழாவில் மற்றும் பாஜக கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சென்னை வந்தடைந்தார். இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விழாவில் உள்துறை அமித்ஷா கலந்து கொண்டார். அதன் பிறகு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து அமித்ஷாவிற்கு பலத்த வரவேற்பளித்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இன்று 2024ம் ஆண்டு வரவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து கமலாலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார்.

BJP
BJP

அப்போது, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய அமித் ஷா, “முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி பாஜக பயன்பெற வேண்டும். கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டில் 10 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுவது, தேர்தலுக்கான வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசனை வழங்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அதில், கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கவேண்டி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது

logo
Kalki Online
kalkionline.com