

தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) மேற்கொண்டது. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணியின் முதற்கட்டமாக, மாநிலத்திலுள்ள 6.41 கோடி வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு, இப்பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை -14.25 லட்சம்
காஞ்சிபுரம் -2.74 லட்சம்
செங்கல்பட்டு- 7,01 லட்சம்
திருவள்ளூர் -6.19 லட்சம்
மதுரை -3.80 லட்சம்
சிவகங்கை -1.5 லட்சம்
ராமநாதபுரம் -1.17 லட்சம்
தேனி -1.25 லட்சம்
திண்டுக்கல்- 3.24 லட்சம்
விருதுநகர் - 1.89 லட்சம்
கோவை -6.50 லட்சம்
திருப்பூர் -5.63 லட்சம்
நீலகிரி - 56,091
ஈரோடு -3.25 லட்சம்
கன்னியாகுமரி -1.53 லட்சம்
கடலூர் -2.46 லட்சம்
விழுப்புரம் -1.82 லட்சம்
கள்ளக்குறிச்சி -84,329
திருநெல்வேலி-2.16 லட்சம்
தென்காசி -1.51 லட்சம்
தூத்துக்குடி -1.62 லட்சம்
சேலம் -3.62 லட்சம்
கிருஷ்ணகிரி -1.74 லட்சம்
நாமக்கல் -1.93 லட்சம்
திருச்சி -3.31 லட்சம்
அரியலூர் -24,368
கரூர் - 79,690
பெரம்பலூர்- 49,548
மயிலாடுதுறை-75,378
நாகப்பட்டினம் -57,338
தஞ்சாவூர் -2.06 லட்சம்
புதுக்கோட்டை-1.39 லட்சம்
வேலூர் -2.15 லட்சம்
ராணிப்பேட்டை -1.45 லட்சம்
திருப்பத்தூர் -1.16 லட்சம்
தர்மபுரி -81,515
திருவண்ணாமலை -2.52 லட்சம் வாக்காளர்கள் எஸ்ஐஆர்க்கு பின் நீக்கப்பட்டுள்ளனர்.