

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்தது. மேலும் SIR பணி நிறைவுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கும் பணி துவங்கியது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசம் (18-01-2026) நிறைவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பது மக்களை மகிழ்விக்கிறது . இதன் மூலம் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் தங்கள் தவறுகளை திருத்தம் செய்து வாக்காளராக தங்கள் உரிமையை நிலைநாட்டலாம்.
திருத்தங்களை மேற்கொள்வது எப்படி?
வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, வயது, புகைப்படம் போன்ற விவரங்களை மாற்ற மூன்று எளிய வழிமுறைகள் உள்ளன:
1. ஆன்லைன் முறை (இணையதளம்):
தேசிய வாக்காளர் சேவை போர்டல் (NVSP) இணையதளத்திற்குச் செல்லவும்: voters.eci.gov.in.
'Login' அல்லது 'Register' செய்து, “Correction of Entries in Electoral Roll” என்பதைத் தேர்வு செய்யவும்.
படிவம்-8 (Form-8) நிரப்பி, தேவையான ஆவணங்களைப் (ஆதார், ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டண ரசீது போன்றவை) பதிவேற்றவும்.
'Submit' செய்த பின் கிடைக்கும் விண்ணப்ப எண்ணைக் (Application Number) கொண்டு தற்போதைய நிலையை (Status) அறியலாம்.
2. மொபைல் செயலி (Mobile App):
Voter Helpline App (Android / iOS) மூலம் உள்நுழைந்து, படிவம்-8-ஐ நிரப்பி ஆவணங்களைப் பதிவேற்றலாம்.
3. நேரடி முறை:
உங்கள் தொகுதியின் தேர்தல் பதிவு அலுவலகம் (ERO) அல்லது வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (BLO) படிவம்-8-ஐப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்:
அடையாளச் சான்று: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம்.
முகவரிச் சான்று: மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி அல்லது தொலைபேசி கட்டண ரசீது.
வயதுச் சான்று: பள்ளிச் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ்.
ஆன்லைன் அல்லது நேரடி முறை எது சிறந்தது?
இரண்டு முறைகளும் சிறந்தது என்றாலும் நமது சூழலுக்கு சரியானதைத் தேர்வு செய்வது நல்லது. தற்போதுள்ள இணைய வசதிகளில் ஆன்லைனில் செய்வது பெரும்பாலானவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஸ்மார்ட்போன் / இணைய வசதி இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே கையில் இருக்கும் ஆதார், முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்பித்து குறைந்த நேரத்தில் வெளியே சென்று அலைலாமல் வீட்டிலிருந்தே செய்யலாம்
Application status ஐ ஆன்லைனிலேயே பார்க்கலாம் என்பது சிறப்பு
24×7 ஆன்லைன் சேவையில் குறைகளும் உண்டு. மொபைலில் ஆவணங்களை ஏற்றத் (upload ) தெரியாவிட்டால் சிரமம் என்பதுடன் சில சமயம் டவர் பிரச்சினையால் website / app மெதுவாக இயங்கலாம். இருப்பினும் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்றவற்றுக்கு ஆன்லைன் முறை மிகவும் ஏற்றதாகவே உள்ளது.
அதே நேரம் இணையம் / ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் , வயதானவர்கள் மற்றும் ஆவணங்களில் குழப்பம் இருந்தால் நேரடியாக தேர்தல் அதிகாரியை (BLO / ERO வை) நேரில் சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்கள் வழிகாட்டுதலில் ஆவண சரிபார்ப்புகளை செய்து கொள்ளலாம். குறிப்பாக பெரிய திருத்தங்கள், அல்லது ஆவணப் பிரச்சினை இருந்தால் இந்த முறையே நல்லது.
படித்தவர்கள் மற்றும் விஷயஞானம் உள்ளவர்கள் வயதானவர்கள் அல்லது ஆன்லைன் பயமுள்ளவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் உதவி செய்வது நல்லது.