#BREAKING : சேலம்,கோவை,திருநெல்வேலி உட்பட 18 மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் சிறப்பு வாக்காளர் வரைவு திருத்தப் பணிகள் (SIR) முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தத் திருத்தப் பணிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், தேர்தல் ஆணையம் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்து வந்தது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதுக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய மிக முக்கியமான ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது விடுபட்டவர்கள், நாளை (டிசம்பர் 20) முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 'படிவம் 6'-ஐப் பயன்படுத்தி தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்த பிறகு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 12,03,917 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளனர்; ஆண் வாக்காளர்கள் - 6,08,628, பெண் வாக்காளர்கள் - 5,95,153 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் - 136 பேர் பட்டியலில் உள்ளனர் இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் என 81,515 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நீக்கப்பட்டவர்கள் - 1,93,706
குடிபெயர்ந்தவர்கள் - 100201
இருமுறை பதிவு செய்தவர்கள் - 8836
கண்டறிய இயலாதவை - 18023
மற்றவை 534
திருநெல்வேலி மொத்த வாக்காளர்கள் - 3,05,804
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,119
இறந்தவர்கள் 19,535
இடம்பெயர்ந்தவர்கள் 19,589
அம்பாசமுத்திரம் மொத்த வாக்காளர்கள் - 2,60,511
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 42,501
இறந்தவர்கள் - 16,665
இடம்பெயர்ந்தவர்கள் - 23,666
கோவை வரைவு வாக்காளர் பட்டியல் - 32,25,198
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 6,50,590
SIR-க்கு பின் உள்ள வாக்காளர்கள் - 25,74,608
கரூர் எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை : 8,98,362
எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை : 79,690
தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை : 318,672
திருச்சி எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு வாக்காளர்கள் எண்ணிக்கை : 23,68,967
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை : 3,31,787
தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை : 20,37,180
சேலம் மொத்த வாக்காளர்கள் - 30,30,537
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 3,62,429
SIR-க்கு பின் உள்ள வாக்காளர்கள் - 26,68,108
இறந்த வாக்காளர் எண்ணிக்கை - 1,00,974
முகவரி மாற்றம் செய்தவர்கள் - 2,41,283
வேலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் : 10,88,005
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 2,15,025
இறந்த வாக்காளர் எண்ணிக்கை : 48,305
நிரந்தர குடிபெயர்வு : 71,719
இருமுறை பதிவு : 10055
தென்காசி மொத்தமுள்ள வாக்காளர்கள் :12,25,297
வாக்காளர்கள் நீக்கம் : 1,51,902
இறந்தவர்கள் : 70,139
முகவரி மாற்றம் : 71,184
மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் : 27,40,631
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 3,80,474
இறந்த வாக்காளர் எண்ணிக்கை : 94,432
முகவரியில் இல்லாதவர்கள் : 38,036
நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் : 2,36,068
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 1,45,157
இறந்த வாக்காளர் எண்ணிக்கை : 46,484
குடிபெயர்வு : 60,277
இருமுறை பதிவு : 6,875
கண்டறிய இயலாதவை : 31,005
மற்றவை : 516
காஞ்சிபுரம்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 11,26,924
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6.50 லட்சம் - 2,74,274
திண்டுக்கல்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 19,34,447
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 16,09,533
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914
தஞ்சாவூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 20,98,561
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,92,058
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593
விழுப்புரம்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 17,27,490
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,44,625
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865
அரியலூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,30,890
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,06,522
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368
கடலூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,93,577
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 19,46,759
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818
கிருஷ்ணகிரி:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 16,80,626
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,06,077
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

