ஸ்ட்ராங் ரூம்களில் துணை ராணுவப்படை : போலீஸ் தீவிர கண்காணிப்பு..!

Strong room
Strong room
Updated on

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85‌.15% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் வாக்கு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா, அண்ணா பல்கலைக்கழகம் என 3 மையங்களில் 16 சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையின் 16 தொகுதி வாக்குப்பெட்டிகள் 3 பிரிவாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம்களுக்கு மத்திய துணை ராணுவப்படை, தமிழக காவல்துறை இணைந்து 4 அடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மையங்களுக்கு வெளியே திரண்டுள்ளனர்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ராதாகிருஷ்ணாநகர், திரு வி க நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கக்கூடிய இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பில் காவல்துறை யினரும் துணை ராணுவ படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com