தமிழ்நாட்டில் முதல் GCC.. 250 பேருக்கு வேலைவாய்ப்பு..!

தரமணி DLF டவுன்டவுனில் அமையவுள்ள மையம்; முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
வால்கிரீன்ஸ்
வால்கிரீன்ஸ்
Updated on

தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில், தரமணியில் உள்ள DLF Downtown வளாகத்தில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Walgreens India Private Limited நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மையம் மூலம் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை; சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எப் டவுன்டவுன் (DLF Downtown) தரமணி வளாகத்தில் இந்த நிறுவனம் அமையவுள்ளது. இதன்மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும், தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி டைப் செய்ய வேண்டாம், பேசினாலே போதும்: தமிழ்நாடு அரசின் புதிய ஏ.ஐ (AI) திட்டம்..!
வால்கிரீன்ஸ்
logo
Kalki Online
kalkionline.com