சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் வேண்டுமா?

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் வேண்டுமா?

சென்னை மாநகரப் பேருந்துகளில் இனிமேல் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வரும் 21ம் தேதி முதல், 40 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு கிடைக்கும்?

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னையில் வாழும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்படும் . இது டிசம்பர் 2022 வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த அரை ஆண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 40 இடங்களில் மூத்த குடிமக்களுக்கு டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படி பெறுவது?

குடும்ப அட்டை சான்றுடன் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை சமர்ப்பித்து மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள டோக்கன்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு கிடைக்கும்?

அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம், மத்திய பணிமனை, சென்டல் பேருந்து நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை-1, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை-1, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, M.K.B.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம்-மெப்ஸ் பே.நி., பூந்தமல்லி, பெரம்பூர் பேருந்து நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com