கோவிட்-19 க்கு பிறகு, IRCTC இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது.
புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டும். ஆனால் சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்கை இன்னும் சரிபார்க்கவில்லை. கணக்கைச் சரிபார்க்காத பயனர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. ஆதலால் நீங்கள் உங்களது IRCTC கணக்கை மீண்டும் ஒரு முறை சரிபார்ப்பது அவசியம் ஆகும். கூடிய சீக்கிரம் உங்களது IRCTC கணக்கை சரி பார்க்கவும். அப்பொழுதுதான் உங்களால் அடுத்த முறை எந்தவொரு இடையூறுமின்றி டிக்கெட்டை புக் செய்ய முடியும்
IRCTC வழங்கிய விதியின் கீழ், ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியம். IRCTC ஆல் செய்யப்பட்ட மாற்றம் பல மாதங்களாக இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத பயணிகளுக்குப் பொருந்தும். உங்கள் கணக்கை நீங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை என்றால், சரிபார்ப்பு செயல்முறையை விரைவில் முடிக்கவும். இதைச் செய்து முடித்த பிறகு, டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த வித சிக்கலையும் சந்திக்க வேண்டியதில்லை.
IRCTC ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குச் சென்று சரிபார்ப்பு சாளரத்தில் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, சரி பார் என்கிற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தால் உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளீடு செய்து மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் அஞ்சல் ஐடியும் சரிபார்க்கப்படும்.
இந்த செயல்முறையை முடித்த பிறகு, ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.