அஜந்தா குகையில் தங்கி, வானில் நட்சத்திரங்களை ரசிக்கணுமா?

அஜந்தா குகை
அஜந்தா குகை
Published on

 மஹாராஷ்டிராவில் அஜந்தா குகைகளில் தங்கியிருந்து இரவு நட்சத்திர வானத்தை காணும் சுற்றுலா தொடங்கப்பட உள்ளது.

 மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அடுத்த மாத இறுதிக்குள் அவுரங்காபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைகளுக்கு அருகில் நட்சத்திரங்களைப் பார்க்கும் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.

அஜந்தா குகையில் இருந்து மேற்கு தொடர்ச்சிமலையின் சஹ்யாத்ரி மலையின் 270 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்கும் ‘அஜந்தா வியூ பாயின்ட்' உள்ளது. இந்த இடத்திலிருந்து இரவு வேளையில் ஜொலிக்கும் நிலவையும் நட்சத்திரங்களையும் கண்டு ரசிக்கலாம் என்று எம்டிடிசி பொது மேலாளர் சந்திரசேகர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள்;

உலகப் புகழ்பெற்ற இந்த அஜந்தா குகைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மின்விளக்குகளின் தாக்கம் அதிகமாக இருக்காது.

குளிர்காலத்தில் வானம் தெளிவாக இருப்பதால், இருண்ட வானில் மின்னும் நட்சத்திரங்களைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வரலாற்று சிறப்புமிக்க இடத்தின் அழகை ரசிப்பதோடு, அங்கிருந்து வானத்தின் அழகையும் ரசிக்கலாம்.

மேலும் வானில் நட்சத்திரங்கள் குறித்த அடிப்படை அறிவு, மற்றும் தொலைநோக்கி மூலம் வானைக் கண்டு களிப்பது போன்ற பயிற்சிகள் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படும். நவம்பர் இறுதிக்குள் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

-இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com