எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம்.

எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம்.

மிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை 3° செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. காலை 10 மணியிலிருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, மாலை 5 மணிவரை மக்களை வாட்டி வதைக்கிறது. இடையில் சில நாட்கள் பெய்த கோடை மழையால் வெப்பம் சற்று குறைந்தாலும், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. பகல் வேலைகளில் வெளியே பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

அதிகப்படியான வெப்பத்தால் தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப் பிடிப்பு, வலிப்பு, சுயநினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் கோடைக்காலத்திற்கென்று சில வியாதிகள் ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் பலவிதமான தோல் நோய்களும், ஹீட் ஸ்ட்ரோக், சன் பர்ன் போன்றவை கூட வரலாம். எனவே உடலில் ஏதேனும் கொப்புளங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கும் நிலையில், முதற்கட்டமாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். எனவே குறைந்தது தினசரி 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். பழங்களைப் பொறுத்தவரை தர்ப்பூசணி, மஸ்க் மேலான், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களையும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி வெயில் நேரத்தில் உடுத்தும் உடையிலும் கவனம் தேவை என்கின்றனர். தடிமனான ஆடைகளை அணியாமல், மெல்லியதாக காற்று உட்புகுவதற்கு ஏதுவாக இருக்கும் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்துகொள்வது நல்லது. 

குறிப்பாக அடுத்த நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், முடிந்த வரை பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த மாதம் 20ம் தேதி முதல், அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனவும், இது அப்படியே நகர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழை அதிக அளவில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com