பேருந்தில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

பேருந்தில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை!  போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!
Published on

பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் போக்குவரத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகள், மேல் கூரை உள்ளிட்ட இடங்களில் தொங்கி செல்லும் நிலையானது தினந்தோறும் நடைபெற்று வருகிறது.  பஸ்ஸில் உள்ளே இடமிருந்தாலும் ஸ்டைலாக ஒடிவந்து படியில் தொங்கிச்செல்லும் மாணவர்களால் பொதுமக்களுக்கு எப்போதும் தொல்லைதான். இப்படி ஏறி இறங்கும்போது ஒருவரோடு ஒருவர் மோதி மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் தொடரந்து நிகழ்கிறது.  பஸ் டிரைவர் அவரது கவனம் முழுவதும் படியிலே தொங்கிக் கொண்டுவரும் மாணவர்கள் மேல் இருப்பதால், அவருக்கும் டென்ஷன்தான். இதனால் ஒட்டுனர் மாணவர்கள் இடையே அடிக்கடி வாய்தகராறு நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுனர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் பேருந்தில் படிகட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள் தொடர்பாக அவர்கள் படிக்கும் பள்ளியில் புகார் அளிக்கலாம் என்றும், மாணவர்களின் பாதுகாப்புக்கு ஓட்டுனர்களே பொறுப்பு என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவுகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, போக்குவரத்து மேலான் இயக்குனர் வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துனர்களின் பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணிக்க முற்பட்டால் பேருந்தை நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அறிவரை வழங்கியும் தொடர்ந்து மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100ஐ அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அறிவுரை கேட்காதோர் மீது போக்குவரத்து கழகத்திடம் ஓட்டுனர், நடத்துனர் புகாரளிக்க வேண்டும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் எந்தவித இடையூறும் இன்றி அவர்கள் பயணம் மேற்கொள்ள அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com