குளோரின் மாத்திரை வினியோகம்
குளோரின் மாத்திரை வினியோகம்

குடிநீரில் கழிவு நீர்: குளோரின் மாத்திரை வினியோகம்!

Published on

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் தொற்று நோய் பரவலை தடுக்க, 12 லட்சம் குடும்பங்களுக்கு குளோரின் மாத்திரை வழங்க, சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பருவமழையையொட்டி, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை அகற்ற, சாலை காலி இடங்களில் தற்காலிக நீர்வழி பாதை அமைக்கபடும். இதற்காக பள்ளம் தோண்டும்போது, பூமிக்குள் பதித்த குடிநீரில், கழிவு நீர் குழாய்கள் சேதம் ஏற்படுத்தும். இதனால், குடிநீரில் கழிவு நீர் கலக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்று, கழிவு நீர் கலக்கும் குடிநீரை அப்படியே பருகினால், காலரா உள்ளிட்ட தொற்று நோயால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, குடிநீரில் கலந்து பருக கூடிய குளோரின் மாத்திரை வழங்க, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குடிசை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வீடு தோறும் குளோரின் மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பணியை, வார்ட் வாரியாக ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஒரு மாத்திரை 15 லிட்டர் குடிநீரில் கலந்து, இரண்டு மணிநேரம் கழித்து பருக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com