காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பு..!!

water
water source: dinamani
Updated on

மதுரை மாவட்டம் விரகனூர் சந்திப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் செயற்கை நீரூற்று போல தண்ணீர் பெருக்கெடுத்து வீணாகிறது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாய்களில் ஏற்படும் திடீர் உடைப்புகள், அப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை பாதிப்பதுடன், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதற்கும் காரணமாகின்றன. பெரும்பாலும் சாலையோரப் பணிகளில் ஜேசிபி(JCB) இயந்திரங்கள் மூலம் குழாய்கள் சேதம் அடைவது அல்லது துருப்பிடித்த குழாய்களில் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்படுவது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றது.

உடைப்பு ஏற்பட்ட இடங்களில் அதிகாரிகள் உடனடியாக தற்காலிக நிறுத்தங்களை ஏற்படுத்தி, பழுது பார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com