தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வட மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்த வீடியோவை திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங் சாய் வெளியிட்டுள்ளார். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல் துறையினர் என தெரிவித்துள்ளனர் .
வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்காக ஊருக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பஸ் நிலையங்களிலும் ரயில்நிலையங்களில் அவர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளதாக தமிழக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டியடித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலானது. ஆனால், அது தேநீர் கடையில் நடந்த தகராறின் விளைவு என்றும் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னை எதுவும் அதில் இல்லை என்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது. இந்நிலையில் அதிக அளவிலான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்ததாக கூறப்பட்டது.
மற்றொரு வடமாநில தொழிலாளி, காவல்துறை தங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். பீஹாரில் வந்துள்ள வடமாநில தொழிலாளி இங்கு நாங்கள் பாதுகாப்பாக பணிபுரிந்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.